வட்டப் பாதையில் நான்காவது நாளாக ரயில்கள் தாமதம்

வட்டப் பாதையில் நான்காவது நாளாக ரயில்கள் தாமதம்

1 mins read
3ccd0d63-d14a-4487-b81c-19fcef79c274
-

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­ன­மும் இணைந்து ரயில் பாதையில் சைகைக் கோளாறைச் சரி­செய்­யும் பணியில் இர­வு­ப­க­லாக ஈடு­பட்­டி­ருந்தா­லும் வட்டப் பாதை ரயில் தடத்­தில் பயணத் தடை நீடிக்­கும் என்று நேற்று காலை கூறப்­பட்டது. சென்ற திங்கட்­கிழமை முதல் அந்தத் தடத்­தில் பயணத் தடை ஏற்­படு­வ­தால் பய­ணி­களிடையே அதி­ருப்தி நில­வு­கிறது. ரயில் உற்­பத்தி நிறு­வ­ன­மான அல்ஸ்­தோம் உடன் இணைந்து குழுவாக செயல்­பட்­டா­லும் ரயில் சேவையில் இருக்­கும்­போது தடத்­தில் சோதனை­கள் செய்ய இயலாத சூழ­லி­ருப்­ப­தாக இவ் விரு அமைப்­பு­களும் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

'ரயில் நிலை­யங்களில் இருந்து ரயில்­கள் புறப்­படு­வதற்கு கூடுதல் நேர­மெடுக்கக்­ கூடும்' என்று நேற்று காலை 6.56 மணி­ய­ள­வில் பய­ணி­களுக்கு டுவிட்­டர் மூலம் எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­தது. பய­ணி­கள் மாற்று வழி­களில் பய­ணத்தைத் தொடர நினைத்­தால் அவர்­களுக்கு வழி­காட்­டு­ வதற்­காக கூடுதல் ஊழி­யர்­கள் நிலை­யங்களில் இருப்­பர் எனவும் கூறப்­பட்­டது. சென்ற திங்கட்­கிழமை காலை உச்ச நேரத்­தில் ரயில் சேவைத்­தடை ஏற்­பட்­டது. அதற்கு சைகைக் கோளாறு காரணம் என்று அன்றைய தினம் பிற்­ப­க­லில் கண்ட­றி­யப்­பட்­டது.