அமைச்சர் சண்முகத்துடன் கலந்துரையாடல்

அமைச்சர் சண்முகத்துடன் கலந்துரையாடல்

1 mins read
6d69b31f-71e0-4bab-a1cf-8469b8863e95
-

உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்துடனான 'தமிழ் சமுதாய'க் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் கலந்துரையாடல் நடைபெறும். 'சிங்கப்பூர் தமிழ் சமுதாயம்' என்ற சமூக ஊடகக் குழுவும் தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகமும் இணைந்து இந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சிங்கப்பூரின் தமிழ் சமுதாயம் பல்வேறு துறைகளில் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பொது மக்கள் அமைச்சருடன் கலந்துரையாடலாம். பல துறைகளைச் சேர்ந்த சிங்கப்பூர் தமிழர்கள் இக்கலந் துரையாடலில் பங்கேற்குமாறு அழைக்கப்படுகின்றனர். எனினும், முன்பதிவு செய்வது முக்கியம். முன்பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம்: http://axlephp.cloudapp.net/stc/ மேல்விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: Sgindians.STC@gmail.com