சாம்சங் கேலக்ஸி நோட்7 கைத்தொலைபேசிகளின் விற்பனை நிறுத்தப்படும் என்று சாம்சங் நிறுவனம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து எம்1, ஸ்டார்ஹப், சிங்டெல் ஆகிய மூன்று உள்ளூர் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களும் இந்த வகை கைத்தொலைபேசிகளின் விற்பனையை நிறுத்தியுள்ளன. பேட்டரி பிரச்சினை காரணமாக இந்தக் கைத்தொலைபேசி களின் விற்பனையை நிறுத்துவதாக நேற்று மாலை சோல் நகரத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சாம்சங் அறிவித்தது. கைத்தொலைபேசிக்கு மின்னூட்டம் செய்யும்போது சில பேட்டரிகள் வெடித்துள்ளன. 35 கைத்தொலைபேசிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நோட்7 கைத்தொலைபேசிகளை வாங்கிய உள்ளூர் வாடிக் கையாளர்கள் அடுத்த இரு வாரங் களில் மாற்று கைத்தொலைபேசிகளைப் பெற முடியும். "ஏற்கெனவே சாம்சங் கேலக்ஸி நோட்7 கைத்தொலைபேசிகளை வாங்கியவர் களுக்கு அவற்றுக்குப் பதிலாக புதிய கைத்தொலைபேசிகள் வரும் வாரங்களில் அளிக் கப்படும்," என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

