தமிழவேல்
'முன்னேற்றப் பாதையில் சிங்கப்பூர் இந்திய சமூகம்' போட்டித்தன்மைமிக்க உலகச் சூழலில் சிங்கப்பூர்த் தமிழர்கள், சிங்கப்பூரர்களாக மேம்பட்டு தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளவேண்டும் என்றும் அப்போதுதான் நாம் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
பதவி என்பது தற்காலிகமான ஒன்று என்றும் பதவி உயரும்போது பொறுப்புகளும் அதிகரிக்கின்றன என்று கூறிய அமைச்சர் சண்முகம், "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது" எனும் கண்ண தாசன் பாடல் வரிகளை உதாரணமாகச் சுட்டினார். குறிப்பாக அப்பாடலில் வரும், "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்!" எனும் வரிகளை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும் என்றார் அவர்.
ஒன்றிணைந்த சமூகமாக நாம் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி நமது சமூகத்தை மதிப்புமிக்க நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் இவ்வரிகள் உணர்த்துவதாக அமைச்சர் சொன்னார். கலந்துரையாடலுக்குப்பின் செய்தியாளர் களிடம் பேசிய திரு சண்முகம், கடந்த சில ஆண்டுகளில் இந்திய சமூகம் எத்தகைய முன்னேற்றம் கண்டுள்ளது, எதில் பின்தங்கி உள்ளது, அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் போன்றவற்றைக் கலந்துரையாடலின்போது பகிர்ந்துகொண்டதாகக் கூறினார். குறிப்பாக, நமது இந்திய சமூகம் கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப் போது மூன்று அம்சங்களில் முன்னேறியுள் ளது என்றார் அமைச்சர்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்

