சிங்கப்பூரில் அரிய பல தாவரங்களும் விலங்குகளும் அழிந்து விடும் நிலையில் உள்ளன. அத்தகைய 46 சிற்றினங்களைச் சேர்ந்த தாவரங்களையும் விலங்குகளையும் காப்பாற்ற உதவிகள் இடம்பெறவிருக்கின்றன. தேசிய பூங்கா வாரியம் இதற்காக அந்தச் சிற்றினங்களை அடையாளம் கண்டிருக்கிறது. அவற்றில் 31 தாவரச் சிற்றினங்களும் ஏழு விலங்குச் சிற்றினங்களும் எட்டு கடல்வாழ் சிற்றினங்களும் அடங்கும். தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இதனை அறிவித்தார். சிங்கப்பூர் பூமலையில் நேற்று நடந்த உயிரியல் பன்மய போதனை விழா சந்தையில் இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். தாவரங்களை, விலங்குகளைக் காப்பாற்ற இடம்பெறும் இம்முயற்சிகள் அடுத்த இரண்டு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரைப்பட்ட காலத்தில் இடம்பெறும்.
ஒவ்வொரு சிற்றினமும் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டு அவை வளரக்கூடிய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்படும். அவற்றின் மூலம் திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விலங்கும் தாவரமும் சுற்றுப்புறத்துடன் எந்த வகையில் தொடர்புகொண்டிருக் கின்றன என்பதை அறிவியல் அறிஞர்கள் முடிவுசெய்வார்கள். இதன்மூலம் ஒரு விலங்கை அல்லது தாவரத்தைச் சுற்றுப்புற வாழ்விடத்தின் இதர உயிரினங் களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு இடங்களுக்கு மாற்றுவது எப்படி என்பதை அவர் கள் முடிவு செய்வார்கள். சிங்கப்பூரில் அழிந்துவரக் கூடிய ஒன்றாக ஒரு வகை சிற்றினத்தைச் சேர்ந்த தட்டாம் பூச்சி அடையாளம் காணப்பட்டி ருக்கிறது. சிங்கப்பூரில் அத்தகைய பூச்சிகளின் எண் ணிக்கை 250 கூட இல்லை.

