தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தேவை: பிரதமர்

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தேவை: பிரதமர்

2 mins read

சிங்கப்­பூர் அதி­ப­ருக்­குச் சேமிப்பைப் பாது­காக்­கும் அதி­கா­ரங்கள் இருப்­ப­தால் அவர் அந்த அதி­கா­ரங்களைப் பயன்படுத்­து­வதற்கு அவர் தேர்ந்­தெ­டுக்­கப்பட்ட அதி­ப­ராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று பிர­த­மர் லீ வலி­யு­றுத்­தி­யுள்­ளார். அதிபர் தேர்­த­லின் அம்­சங்கள் குறித்து அர­சமைப்பு ஆணைக்­கு­ழு­முன் சாட்­சி­ய­ம­ளித்த பலர் முன்னைய நியமன அதிபர் முறைக்கு மாறலாம் என்ற யோசனையை முன்வைத்­த­னர். ஆனால் இது அதிபரை ஒரு சங்க­ட­மான நிலைக்­குத் தள்ளும். ஏனெனில் அப்­போ­தி­ருக்­கும் அர­சாங்கம் சேமிப்­பு­களைப் பயன்­படுத்­த­வேண்­டும் என்று எண்­ணும்­போது அதை எதிர்ப்­ப­தில் அதிபருக்குச் சிரமம் இருக்­கும் என்று நேற்று தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பப்பட்ட பேட்­டி­யில் பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலையில் அதி­ப­ருக்கு எதிராக புதிய அர­சாங்கம், "இதைச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்­கிறது. எங்களுக்கு மக்­களின் அதி­கா­ரம் உள்ளது. தேர்தல் அறிக்கையை முன்வைத்து நாங்கள் தேர்­த­லில் வென்­றுள்­ளோம். இப்­பொ­ழுது இந்தப் பணத்தைச் செலவு செய்யக்கூடாது என்று எப்­ப­டிச் சொல்­ல­லாம்!" "இது அதிபரை ஒரு இக்­கட்­டான நிலைக்கு இட்­டுச்­செல்­லும்," என்று திரு லீ விளக்­கினார். "நீங்கள் உண்மை­யி­லேயே அதி­கா­ரத்தைப் பயன்­படுத்த நினைத்து முடியாது என்று கூறினால் அது எடு­ப­டாது. ஆகை யால் இதற்கு இரு பாது­காப்பு அம்சம் தேவை என்றால் அதற்­கென தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும்," என்றார் அவர். சிலர் இது­போன்ற பாது­காப்பு தேவை­யில்லை என்றும் நாடா­ளு­மன்றமே அனைத்து முடி­வு­களை­யும் எடுக்க வேண்டும் என்றும் வாதி­டு­கின்ற­னர்.

சிங்கப்­பூர் முதல் 25 ஆண்­டு­களில் அந்த முறையைத்­தான் கொண்­டி­ருந்தது என்று பிர­த­மர் சுட்­டினார். ஆனால் பல அர­சு­கள் அதி­கா­ரங்கள் பகிர்ந்­தி­ருப்­பதை உறுதி செய்­துள்­ளன என்ற திரு லீ அதற்கு உதா­ர­ண­மாக கணி­ச­மான அதி­கா­ரங்களைக் கொண்ட மேல்சபையை அல்லது தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அதிபர் இருப்­பதைச் சுட்­டினார். "ஏதாவது ஒரு பெரிய தவறு ஏற்­பட்டு அரசு முறையே கவிழ்ந்­தி­ரா­த­படி அர­சி­யிலை நிலைப்­படுத்­தும் ஒரு கட்­டமைப்பு அங்கு உள்ளது. "அது­போன்ற ஒரு நிலைத்­தன்மை வாய்ந்த கட்­டமைப்பு நமக்கு தேவை. அதற்­கா­கவே தெர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அதிபர் முறையைத் உரு­வாக்கி­யுள்­ளோம்," என்று பிர­த­மர் லீ கூறினார்.