போலிஸ் ஐந்து நாள் நடவடிக்கை எடுத்து மொத்தம் 87 பேரை கைது செய்திருக்கிறது. அவர்களில் 54 பேர் ஆடவர்கள்; 33 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 20 முதல் 56 வரை. ஹோட்டல்கள், வீதிகள், தனி யார் குடியிருப்பு இடங்கள் உள் ளிட்ட பல இடங்களிலும் அதிகாரி கள் நடத்திய சோதனைகளின் விளைவாக அவர்கள் பிடிபட்ட தாக போலிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. பாலியல் நடவடிக்கைகள், பொது இடங்களில் சூதாடியது, போதைப் பொருள் குற்றச்செயல் கள், சட்ட விரோத காம இச்சைப் பொருட்களை விற்றது, கள்ள சிகரெட்டுகளைக் கையாண்டது உள்ளிட்ட பல சட்டவிரோத காரி யங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கள் கைதாகியிருக்கிறார்கள். புலன்விசாரணை தொடர்கிறது. பிடோக் போலிஸ் பிரிவு தலைமையில் நடந்த அந்த ஐந்து நாள் நடவடிக்கை சனிக்கிழமை காலை முடிவடைந்தது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம் போன்ற இதர அமைப்புகளின் அமலாக்க அதிகாரிகளும் அந்த நடவடிக் கையில் ஈடுபட்டிருந்தனர். பிடோக் போலிஸ் பிரிவின் தள பதியான உதவி போலிஸ் ஆணையர் ஆல்வின் மோ, அதிகாரிகள் வெளிப்படுத்திய குழுப்பணியைப் பாராட்டினார். கேலாங்கில் பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் பலரைக் கைது செய்தனர். படம்: சிங்கப்பூர் போலிஸ்

