ஸிக்கா நோயாளிகள் தனிமைப் படுத்தப்படத் தேவையில்லை

ஸிக்கா நோயாளிகள் தனிமைப் படுத்தப்படத் தேவையில்லை

2 mins read
0a701c42-df1f-41de-abbd-244dad1ec75c
-

ஸிக்கா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரில் யாரும் இனி தனிமைப் படுத்­தப் ­ப­டத் தேவை­யில்லை என சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. சிங்கப்­பூ­ரில் இது­வரை­யி­லும் ஸிக்கா கிரு­மி­யால் கடுமை­யான பாதிப்பு எது­வும் இல்லை. ஸிக்கா கிருமியால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என உறுதி செய்­யப்­பட்ட எவ­ரும் மருத்­து­வ­ரால் பரிந்­துரைக்­கப்பட்­டா­லொ­ழிய மருத்­து­வ­மனை­யில் தங்கி சிகிச்சை பெறத் தேவை­யில்லை. சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் இதனைத் தெரி­வித்­தது. ஸிக்கா பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்ற அறி­குறி தென் ­படு­வோர், ஸிக்கா கிரு­மி­கள் இருப்­ப­தா­கக் கண்ட­றி­யப்­பட்ட பகு­தி­களில் வசிப்­ப­வர்­கள், வேறு பகு­தி­களில் வசிப்­ப­வர்­க­ள் என யாராக இருந்தா­லும் அனைத்து சிங்கப்­பூ­ர­ரும் சோதனை செய்து கொள்ளும் வகையில் மருத்­துவ உதவி நீட்­டிக்­கப்­படும் என்றும் அமைச்சு தெரி­வித்­தது. இவர்கள் கழிவுக் கட்டணமான $60 வெள்ளிக்கு பொது மருந்தகங்களில் சோதனை செய்து கொள்ளலாம்.

தலைவலி, மூட்டுவலி, தசை வலி, கண் சிவத்தல் போன்றவை ஸிக்கா கிருமி பாதிப்புக்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. முதன்­மு­த­லில் ஸிக்கா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர் அறி­யப் ­பட்டு ஒரு வார காலத்­திற்­குப் பிற­கு­தான் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்பா­லா­னோர் அல்­ஜு­னிட், சிம்ஸ் டிரைவ், காலாங் வே, பாய லேபார் வே ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த­வர்­கள் என்­பது தெரி­ய­வந்தது. புதி­தாக பிடோக் நார்த் அவென்யூ 3, ஜூ செங் ரோடு ஆகிய பகு­தி­களில் ஸிக்கா பாதிப்பு உள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. புதி­தாக இப்­போது 16 பேர் ஸிக்கா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­ தது. புதிதாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­ட­வர்­ களு­டன் அல்லது பாதிக்­கப்­பட்ட பகு­தி­களு­டன் தொடர்­பு­கொண்ட­வர்­களா என்ற விவ­ரம் வெளி­யி­டப் ­ப­ட­வில்லை. இது­வரை­யி­லும் 258 பேர் ஸிக்கா கிரு­மி­யால் பாதிக் ­கப்­பட்­டுள்­ள­னர்.

ஏடிஸ் கொசுக்­கள் அதி­க­மான இடங்களில் இருப்­பதை வைத்­துப் பார்க்­கும்­போது ஸிக்கா மேலும் பல பகு­தி­களுக்­குப் பர­வக்­கூடும் என்று எதிர் ­பார்க்­கப்­படு­கிறது. அவ்­வாறு கிரு­மி­கள் பர­வு­வதைக் கட்­டுப்­படுத்த டெங்­கி யைத் துடைத்­தொ­ழிக்­க பயன்படுத்திய அதே பாணி பின்­பற்­றப்­படும் என்று சுகா­தார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் தெரி­வித்­தன. ஸிக்கா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­மனை அல்லது மருந்த­கங்களில் தங்க­ளது சிறு­நீர், இரத்த மாதி­ரி­களைச் சோதனைக்­கா­கக் கொடுத்­து­விட்டு, சோதனை முடிவைப் பெறு­ வ­தற்­காக வீட்­டில் காத்­தி­ருக் ­க­லாம். ஸிக்கா கிருமி பாதித்­ துள்­ளது கண்ட­றி­யப்­பட்டு மருத்­து­வ­ரால் பரிந்­துரைக்­கப்­பட்­டா­ லொ­ழிய அவர் மருத்­து­வ­மனை­யில் தங்கி சிகிச்சை பெறத் தேவை­யில்லை. இதற்கு முன்னர் நோயா­ளி­கள், மருத்­து­வச் சோதனை­யின் முடிவு தெரி­யும் வரை 12 மணி நேரத்­திற்­குத் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர்.