சிங்கப்பூரில் அடுத்த சில நாட்களுக்கு புகைமூட்டம் இருக்காது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவே என வாரியம் கூறியது. அடுத்த சில நாட்களுக்கு தெற்கு அல்லது தென்மேற்கிலிருந்து காற்று வீசும். சுமத்ராவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுத் தரம் இன்று மிதமான அளவிலேயே தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
புகைமூட்டம் இல்லை
1 mins read

