சிங்கப்பூரில் தொடர்ந்து ஐந்து தவணைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் அதிபர் பதவிக்கு வரவில்லை என்றால் அடுத்த ஆறாவது தேர்தல் அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக் கும் தேர்தலாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு அறிக்கையில் பரிந் துரைத்துள்ளது. இப்படிப்பட்ட ஓர் ஏற்பாடு காலக்கிரம முறைப்படி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாட் டின் உயரிய பதவியை வகிக்க வகை செய்யும் என்று குழு குறிப் பிட்டிருக்கிறது. மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறையை மறுபரிசீலனை செய்வதற்காக தலைமை நீதிபதி தலைமையில் அந்தக் குழு அமைக் கப்பட்டது.
சிங்கப்பூரின் அதிபர் என்பவர் நாட்டின் அடையாளமாகத் திகழ் பவர். ஆகையால் அந்தப் பதவி சிங்கப்பூரின் பல இனத்தன்மை யைப் பிரதிபலிக்க வேண்டும் என்று ஆணைக்குழு தெரிவித் திருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இனத் தைச் சேர்ந்தவர் அதிபராக வேண் டும் என்பதற்காக அந்தப் பதவிக் குத் தகுதி பெறும் நிபந்தனையை ஒருபோதும் தளர்த்தக்கூடாது என்று ஆணைக்குழு தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறது. சிங்கப்பூரில் அப்போதைக்கு அப்போது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபர் பதவியில் இருப்பதை உறுதிப்படுத்த சிறப்பு ஏற்பாடு ஒன்று இருக்க வேண்டுமா என்பதைப் பரிசீலிக்கும்படி பிரதமர் லீ சியன் லூங் அந்த ஆணைக் குழுவை கேட்டுக்கொண்டார்.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான அந்த ஆணைக்குழு சிங்கப்பூருக்கு அப்போதைக்கு அப்போது சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பதவியேற்க வேண்டியது அவசியமான ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளது. சிங்கப்பூரில் 1965 முதல் 1970 வரை யூசோஃப் இஷாக் அதிபராக பதவி வகித்தார். பிறகு மலாய்க் காரர் ஒருவர் இதுவரையில் அதிபர் பதவியை வகிக்கவில்லை. அதிபர் பதவி என்பது தம்மால் முடியாத ஒன்று என்ற எண்ணம் சிறுபான்மை இனத்தவரிடையே ஏற்படக்கூடாது என்று ஆணைக் குழு தனது அறிக்கையில் வலி யுறுத்திக் கூறியிருக்கிறது.

