நாணய மாற்றுக்காரரிடம் கொள்ளையடித்த ஆடவருக்குச் சிறை

2 mins read

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பேருடன் சேர்ந்து நாணய மாற்றுக்காரரிடம் கொள்ளையடித்த பாரந்தூக்கி ஓட்டுநருக்கு நேற்று 30 மாதச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. சியாங் லாய் ஹுவாட் என் பவரிடம் 24,000 வெள்ளி ரொக்கத்தையும் 500 வெள்ளி மதிப் பிலான இரண்டு கைபேசிகளையும் கொள்ளையடித்ததை மலேசியரான இளங்கோவன் கோபாலன், 34, நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி விஜயதேவன் கன்னையா, 34, மற்றும் மூவருடன் சேர்ந்து அவர் கொள்ளையில் ஈடு பட்டார். ஆனால் அவருடன் கொள் ளையில் ஈடுபட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அன்று உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டில் விஜயதேவனை இளங்கோவன் சந்தித்ததாகவும் விஜய தேவன் 'வேலை' என்று குறிப் பிட்டதை 'கொள்ளை' என்று இளங்கோவன் புரிந்துகொண்ட தாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கொள்ளைக்குப் பயன்படுத்தும் காரை ஓட்டி வருமாறு இளங்கோவனிடம் கூறிய விஜயதேவன் உத்தரவுக்குக் காத்திருக்குமாறு சொன்னார். சில நிமிடங்களுக்குப் பிறகு விஜயதேவன் அழைத்ததும் இளங்கோவன், விஜயதேவனையும் மற்ற மூவரையும் மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு பின்னர் உட் லண்ட்ஸ் சிவிக் சென்டர் அருகே இறக்கிவிட்டார்.

சிறிது நேரத்தில் 60 வயது மலேசியரான நாணய மாற்றுக்காரர் திரு சாங், உட்லண்ட்ஸ் சிவிக் சென்டருக்குள் நுழைந்தார். அப் போது அங்கிருந்த மூவரும் அவரை இழுத்து வந்து காரின் பின்பக்க இருக்கையில் ஏற்றினர். பின்னர் நாணய மாற்றுக்காரரின் முகத்தை மூடி முகத் திலும் தலையிலும் குத்திய மூவரும் அவரிடமிருந்த பணத்தையும் கைத் தொலைபேசியையும் பறித்துக் கொண்டு அவரை காரி லிருந்து வெளியே தள்ளிவிட்டனர். இந்த வழக்கில் இளங்கோவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி விதிக்கப்பட்டிருக்கலாம்.