மேலும் எட்டுப் பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியது

மேலும் எட்டுப் பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியது

2 mins read

சிங்கப்பூரில் மேலும் எட்டு ஸிக்கா கிருமி தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்று நேற்று மாலை வெளியிட்ட சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் புதிய இடத்தில் ஸிக்கா கிருமி பரவக் கூடிய சாத்தியமும் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது. நேற்று பிற்பகல் வரை எட்டு புதிய ஸிக்கா கிருமி தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதை அமைச்சு உறுதி செய்தது. அவற்றில் இரண்டு அல்ஜூனிட் கிரசென்ட்/ சிம்ஸ் டிரைவ்/ காலாங் வே/ பாயா லேபார் வே ஆகிய வட்டாரங்களுடன் தொடர் புடையது. ஒரு சம்பவம், பீஷான் ஸ்திரீட் 12ல் உள்ள பகுதியுடன் தொடர் புடையது.

இந்த நிலையில் சிக்லாப்பில் உள்ள எலிட் டெரஸ் வட்டாரத்தில் ஸிக்கா கிருமி பரவக்கூடிய சாத் தியம் அதிகரித்துள்ளது. இந்த இடத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருந்த நிலையில் மற் றொருவரும் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதர நான்கு சம்பவங்களில் ஸிக்கா கிருமி பரவும் வட்டாரங் களுடன் தொடர்பில்லை. இதுவரை உள்ளூரில் பரவிய ஸிக்கா கிருமி சம்பவங்களின் எண்ணிக்கை 283ஆக உள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இடங்களில் ஸிக்கா, டெங்கி ஆகிய இரண்டு தொற்று நோய் களையும் பரப்பும் ஏடிஎஸ் கொசுக் களை ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அமைச்சின் அறிக்கை தெரி வித்தது. அல்ஜூனிட் கிரசென்ட், சிம்ஸ் டிரைவ், பாயா லேபார் வே, காலாங் வே, சர்க்யூட் ரோடு, கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல், கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1, பிடோக் நார்த் அவென்யூ, ஜூ செங் ரோட், பீஷான் ஸ்திரீட் 12 ஆகிய இடங்கள் ஸிக்கா கிருமி பரவும் இடங்களாக அடையாளம் காணப் பட்டுள்ளன.