உணவுச் சேவை உருமாற்ற வரைவுத்திட்டம் நேற்றுக் காலை அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 23 தொழில் சார்ந்த வரைவுத்திட்டங்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் முக்கிய தொழிற் துறைகளின் வளர்ச்சியையும் போட்டித்தன்மையையும் மேம் படுத்த இந்த வரைவுத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. "முழுமையான தாக்கத்தை உறுதி செய்ய ஒவ்வொரு துறைக் கும் உற்பத்தித்திறன், புத்தாக்கம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர், அனைத்துலக அளவில் விரிவாக்கம் ஆகிய வற்றுக்கான திட்டங்ளை ஒன்று சேர்க்கிறோம்," என்று துணைப் பிரதமரும் பொருளியல், சமூகத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்,
'செலெக்ட்' குழுமத்தின் தலை மையகத்தில் நடைபெற்ற உணவுச் சேவைத் துறைக்கான உருமாற்ற வரைவுத்திட்ட அறிமுக விழாவில் திரு தர்மன் கலந்துகொண்டு பேசினார். உற்பத்தித்திறனை உயர்த்து வதும் மனிதவளத்தைச் சார்ந்திருப் பதைக் குறைப்பதும் உணவுச் சேவைத் துறை எதிர்நோக்கும் சவால்கள் என்று ஸ்பிரிங் சிங்கப்பூர் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற் பத்தியில் உணவுச் சேவைத் துறையின் பங்களிப்பு வெறும் 0.8 விழுக்காடாகும். ஆனால் அத்துறையில் 160,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இது சிங்கப்பூரின் ஊழியரணியில் 4.5 விழுக்காடாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊழியர் எண்ணிக்கையை உயர்த் தாமல் வருடாந்திர உற்பத்தித்திறன் வளர்ச்சி இலக்காக இரண்டு விழுக்காட்டை எட்ட வரைவுத் திட்டம் செயல்படும்.
தயார்நிலை உணவுப் பொருட்கள், மனிதவளத்தை அதிகம் சாராத தொழில்நுட்பங்கள் அதிக அளவில் கையாளப்படுவதை மேம்படுத்துதல், ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துதல், சிங்கப்பூரின் உணவு, பானத் துறை நிறுவனங்களை வெளிநாடு களில் விரிவாக்கம் செய்தல் ஆகியவை வரைவுத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் அடங்கும். 2025ஆம் ஆண்டுக்குள் எட்டில் மூன்று பேர் விற்பனைத் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு வாங்குவர் என்று ஸ்பிரிங் சிங்கப்பூர் முன்னுரைத்துள்ளது.

