பாதிப்படையும் முதியோருக்கு கூடுதல் பாதுகாப்பு

பாதிப்படையும் முதியோருக்கு கூடுதல் பாதுகாப்பு

2 mins read
9e75a448-3f49-4634-89e6-cea1d7a04e1a
-

பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பெரியவர்களுக்கான மசோதாவுக்கு வலுவான ஆதரவு கிடைத்திருப்ப தாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது. சென்ற ஆண்டு ஜனவரியில் இந்த மசோதா முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. சுயமாகத் தங்களைப் பராமரித்துக்கொள்ள இயலாத பெரியவர்களும் முதியவர்களும் துன்புறுத்தலுக்கும் புறக்கணிப்புக்கும் இலக்காகாமல் மேம்பட்ட பாதுகாப்பளிப்பது மசோதா வின் நோக்கம். தனியார் வீடுகளுக்குள் நுழைந்து ஒருவரின் நலனைக் கண்காணிக்கவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பெரியவர்களைப் பராமரிப்பு இல்லங்கள் அல்லது உடற்குறையாளர் இல்லங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாகத் தங்கச் செய்யவும் அரசாங்கத்திற்கு மசோதா உரிமையளிக்கும்.

மசோதா தொடர்பாக ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 23 வரை நடத்தப்பட்ட பொது கலந்தாலோசனை யின்போது 43 கருத்துகள் கிடைத் ததாக அமைச்சு நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்தது. துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுய புறக்கணிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படவேண்டிய பெரியவர்களுக்காக அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தைப் பெரும்பாலான கருத்துகள் ஆதரித்தன. குடும்பமும் சமூகமும் ஆற்றும் பங்குக்கு மசோதா துணை புரிவ தாகவும் பலரும் கருதினர். ஆனால், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பெரியவர்களைப் பராமரிக் கும் பொறுப்பைக் குடும்பத்திற்குப் பதிலாக அரசாங்கம் ஏற்றுக்கொள் ளக் கூடாது என்று சிலர் கருத்துரைத்தனர்.

அரசாங்கம் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் தலையிடவேண்டும் என்று சிலர் கருத்து கூற, அரசாங்கத்தின் அதிகாரம் கண்காணிக்கப்படாமல் விடப்படக்கூடாது என்று வேறு சிலர் எச்சரித்தனர். இவை ஏற்புடைய கருத்துகள் என்று ஒப்புக்கொண்ட அமைச்சு, கண்காணிப்பு நடைமுறைகள் நடப்பிலிருப் பதாகச் சுட்டிக்காட்டியது.

சர்க்கியூட் ரோட்டில் உள்ள கூரையுடன் கூடிய நடைபாதையில் முதியவர்கள் சிலர் அமர்ந்துள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்