போக்குவரத்து எதிர்திசையில் சென்று விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி

போக்குவரத்து எதிர்திசையில் சென்று விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி

2 mins read
1ff17281-5b0a-4c2e-9a29-c1e96bfa4580
-
Google News Preferred Icon

போக்குவரத்தின் எதிர்திசையில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவரும் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பயணியும் சாலைச் சந்திப்பில் விபத்துக்குள்ளாகினர். கடந்த வியாழக்கிழமை காலையில் போக்குவரத்து போலிசார் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்த வேளையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலிசார் துரத்தும் காட்சி ஸ்டோம்ப் இணையத் தளத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவியது. அதே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மற்றொருவர் சாலைச் சந்திப்பில் இருந்த ஒரு காருக்கடியில் சிக்கிக் கொண்டார். இரு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து போலிசுக்கு வியாழக்கிழமை காலை 8.02 மணிக்கு அழைப்பு வந்தது.

அந்த மோட்டார் சைக்கிள் போக்குவரத்து விளக்குச் சந்திப் பில் நிற்காமல், போக்குவரத்தின் எதிர்திசையில் சென்றதை மற் றொரு காணொளியில் காண முடிந்தது. நேராகச் சென்று கொண்டிருந்த வெள்ளி நிறக் காரின் பாதை யின் குறுக்கே அந்த மோட்டார்சைக்கிள் சென்று மோதியது. 20 வயதுகளில் உள்ள காயமுற்ற இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காருக்கு அடியில் சிக்கிக் கொண்ட ஆடவரை போலிஸ் அதிகாரிகள் வெளியே இழுத்து காப்பாற்றினர். மோட்டார் சைக்கிளை ஒட்டிய ஆடவரிடம் அதற்கான உரிமம் இல்லை என்றும் ஒரு போக்குவரத்துக் குற்றத்துக்காக போலிஸ் அதிகாரி அவரை நிறுத்த முயன்றபோது அவர் பதற்றமடைந்து அங் கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிம்ஸ் அவென்யூவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விபத்தின் விளைவாகக் காருக்கு அடியில் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டார். படம்: ஸ்டோம்ப்