சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் அனைத் திலும் சாம்சங் கேலக்சி நோட் 7 கைபேசிகளைப் பயன்படுத்த தடை விதிக் கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிக்கை ஒன்றில் அறிவித்தது. சாம்சங் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள நோட் 7 கைபேசியில் மின்சாரத்தை ஏற்றும்போது தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. விமானப் பயணிகள் சாம்சங் கேலக்சி நோட் 7 கைபேசியை விமானங்களில் பயன்படுத்தக் கூடாது. அதை இயக்கக்கூடாது. கையில் எடுத்துவராத பெரிய பெட்டியிலும் அந்தக் கைபேசியை வைத்து உள்ளே செல்லக்கூடாது என்று அமெரிக்காவின் அந்த அமைப்பு தெரிவித்தது. இதனையடுத்து சிங்கப்பூர் ஏல்லைன்ஸ் இந்தத் தடையை விதித்துள்ளது.

