சிங்கப்பூரில் 50க்கும் அதிக வயது உள்ளவர்கள் தகவல்தொழில்நுட் பத் தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள அடுத்த மாதம் முதல் அதிக வாய்ப்புகள் இருக்கும். மக்கள் கழக மூத்தோர் பயில கத்திற்கும் தகவல்தொடர்பு மேம் பாட்டு ஆணையத்திற்கும் இடை யில் புதிய பங்காளித்துவ உடன் பாடு ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது. இதன் விளைவாக சிங்கப்பூர் முழுவதும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து மொத்தம் 30 நிலை யங்கள் செயல்படும். இவற்றில் முதியோருக்குத் தகவல்தொழில் நுட்பப் பயிற்சி வகுப்புகளைப் போதிக்கின்ற மேலும் 20 சமூக மன்றங்களும் அடங்கும்.
இவையெல்லாம் சுமார் 800 முதல் 2,000 வரைப்பட்ட வகுப்பு களை நடத்தும். முதியோர் தகவல் தொழில்நுட்ப விழாவின் 10வது ஆண்டுக் கொண்டாட்டம் நேற்று நடந்தது. தொடர்பு, தகவல் அமைச் சர் யாக்கூப் இப்ராஹிம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த அறி விப்புகளை விடுத்தார். முதியோருக்குத் தகவல் தொழில்நுட்பத் தேர்ச்சிகளைப் போதிக்க இரண்டாவது செயல் திட்டம் ஒன்றும் இடம்பெறும். 'தகவல்தொழில்நுட்பத்தைக் கற் போம், பயன்படுத்துவோம்' என்ற அந்தத் திட்டம் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்திற்கும் சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்துக்கும் ஆயுட்கல்வி மன் றத்திற்கும் இடையில் இடம்பெறும் ஒத்துழைப்புத் திட்டமாகும்.
இந்தச் செயல்திட்டத்தின் முதல் பகுதியில் 45 நிமிட பாட போதனை இடம்பெறும். முதியோர் கள் கையடக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவது பற்றியும் வாட்ஸ்=அப் போன்ற செயலி களைப் பயன்படுத்தும் முறை பற்றியும் இதன்மூலம் கற்றுக் கொள்ளலாம். இரண்டாவது பகுதி சாதாரண முறையில் முதியோர் மற்றவர்களிட மிருந்து தேர்ச்சிகளைக் கற்றுக் கொள்ள உதவுவதில் முக்கிய கவ னம் செலுத்தும்.
முதியோர் தகவல் தொழில்நுட்ப விழா நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் முதியோருடன் கலந்து உரையாடினார். படம்: சிங்கப்பூர் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம்

