வடிவமைப்பு, தொழில்நுட்ப பட்டதாரிகளில் 70% பேருக்கு பட்டம்பெறும் முன்பே வேலை

வடிவமைப்பு, தொழில்நுட்ப பட்டதாரிகளில் 70% பேருக்கு பட்டம்பெறும் முன்பே வேலை

2 mins read
9fb965bb-fd01-4a1e-bd15-ce414264e6b9
-

சிங்கப்பூரின் நான்காவது பொது பல்கலைக்கழகமான சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல் கலைக்கழகத்தில் படித்து இந்த ஆண்டில் 300க்கும் அதிக மாணவர்கள் பட்டம் பெற்றனர். அவர்களில் 10ல் ஏழு பேருக்கு பட்டம் பெறுவதற்கு முன்பே வேலை கிடைத்துவிடுகிறது அல் லது அவர்கள் பட்டப்படிப்பைத் தொடர்கிறார்கள், அல்லது சொந்த மாக தொழில் தொடங்குகிறார்கள் என்று இந்தப் பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது.

இந்த அளவு, சென்ற ஆண்டு டன் ஒப்பிடுகையில் 6% அதிகம் என்றும் பல்கலைக்கழகம் தெரி வித்தது. இந்த ஆண்டு பட்டம் பெற்றவர்களில் 71 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். 246 பேர் இளநிலை பட்டம் பெற்றவர்கள்.

முதுநிலை பட்டம் பெற்ற 71 பேரும் இப்பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்கள். வேலை பெற்றவர்களில் கிட்டத்தட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர் படிக்கும்போது நேரடிப் பயிற்சி பெற்ற நிறுவனங்களிலேயே வேலை கிடைத்தது.

சிங்கப்பூரில் புதிதாகத் தோன்றிவரும் தொழில்துறைகளில் 70க்கும் அதிக துறைகளில் இந்தப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்திருக்கிறது. தகவல் தொடர்புச் சேவைகள், பாதுகாப்புத் துறை, வங்கி, நிதித் துறை ஆகியவை இதில் முதலிடம் வகிக்கின்றன. வேலை பெற்றவர்களில் 75%க் கும் அதிகமானவர்கள் 'விவேக நாடு' திட்டத்தில் ஈடுபடும் நிறு வனங்களில் வேலைபார்ப்பார்கள். முதுநிலை பட்டம் பெற்ற 71 பேரில் 62 பேர் இந்தப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பை படித்து, தொடர்ந்து முது நிலை படிப்பை முடித்தவர்கள். இவர்கள் இடம், சுற்றுப்புறம், நகரமயம், கட்டடக்கலை போன்ற சவால்களைச் சமாளிக்கும் அள விற்கு திறமையைப் பெற்று எதிர் கால கட்டடக்கலைச் சிற்பிகளாக விளங்குவார்கள் என்று பல்கலைக் கழகம் தெரிவித்திருக்கிறது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவரான பேராசிரியர் தாமஸ் மெக்னான்டி, "இந்த ஆண்டு பட்டப்படிப்புச் சாதனை குறித்து நாங்கள் பெருமையடைகிறோம். சென்ற ஆண்டைவிட சிறப்பாக இந்த ஆண்டில் 10 பேரில் ஏழு பேருக்கு வேலை கிடைத்துவிட்டது, அல்லது மேற்படிப்பைத் தொடர் கிறார்கள்," என்று கூறினார். "முதன்முதலாக இந்த ஆண்டு முதுநிலை பட்டதாரிகள் வெளிவந் திருக்கிறார்கள்.

தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் (இடது) புதிய பட்டதாரிகளுடன் கலந்துரையாடுகிறார். படம்: சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்பு பல்கலைக்கழகம்