அதிகாலை நேரத்தில் நடந்த கார் விரட்டல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். அந்தக் கார் விரட்டல் சம்பவம் கேலாங்கில் இருக்கும் ஒரு காப்பிக்கடையில் போய் முடிவடைந்தது. ஹெண்டர்சன் சாலையில் சாலை தடுப்பு ஒன்றை அமைத்து வாகனங் களை காவல்துறையினர் சோதித்து வந்த னர். அப்போது வாகனத்தில் வந்த ஒருவர் அந்தச் சாலை தடுப்பில் நிற்காமல் தன் வாகனத்தை வேக மாக ஓட்டிச்சென்றார்.
அந்த 22 வயது ஆடவர், கேலாங் லோரோங் 16ல் ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் ஒரு வேன் வாகனம் மீதும் தன் வாகனத்தை மோதினார். கேலாங் லோரோங் 11ல் ஒரு டாக்சி மீதும் மோதிய அந்த வாகனமோட்டி, கடைசியில் கேலாங் லோரோங் 25ல் தன் வாகனத்தை நிறுத்தினார். அதிலி ருந்து கீழே இறங்கி ஓடத்தொடங் கினார். ஆனால் அதிகாரிகளிடம் சிக்கினார்.
அதிகாலை நேரத்தில் நடந்த கார் விரட்டல் சம்பவத்தில் நான்கு வாகனங்கள் சேத மடைந்தன. இருவர் காயம் அடைந்தனர். படம்: டுவிட்டர்

