மக்கள் கழகத்தின் நீர் விளை யாட்டு அமைப்பு (PA Water-Venture) நேற்று நடந்த அதன் நீர் விளையாட்டுக் கேளிக்கை விழா வில் நின்றுகொண்டே துடுப்புப் போட்டுப் படகோட்டிச் செல்லும் பொழுதுபோக்கு விளையாட்டுச் செயல்திட்டம் ஒன்றைத் தொடங் கியது. அந்தத் திட்டம் இரண்டு அம்சங்களில் ஒருமித்த கவனம் செலுத்தும்.
நீர்நிலைகளில் படகில் நின்ற படியே துடுப்புப்போட்டுப் படகை ஓட்டிச் செல்லும் விளையாட்டைப் பற்றி பொதுமக்கள் கற்றுக்கொள் ளச்செய்வது ஓர் அம்சம். அந்த விளையாட்டில் பாதுகாப்பாக எப்படி ஈடுபடுவது என்பதைக் கற்றுக் கொடுப்பது மற்றோர் அம்சம்.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நேற்று நடந்த நிகழ்ச்சில் சுமார் 500 பேர் கலந்துகொண்டார்கள். மவுண்ட் பேட்டன் அடித்தள அமைப்புகளுக் கான ஆலோசகர் லிம் பியாவ் சுவான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படகுப் பந்தயம் ஒன்றையும் அவர் பிறகு தொடங்கி வைத்தார்.
மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் (நடுவில்) புதிய படகோட்ட நிகழ்ச்சியில் குடியிருப்பாளர் களுடன் சேர்ந்து படகோட்டி மகிழ்ந்தார். படம்: மக்கள் கழகம்

