மூப்படையும் சமூகத்திற்கு ஆதரவுக் கரம்

மூப்படையும் சமூகத்திற்கு ஆதரவுக் கரம்

13 Sep 2016 - 8:50 am

1 mins read

தமிழவேல்

தமது 86ஆவது வயதிலும் வீட்டில் இருக்க முடியாமல் பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரிந்து வருகிறார் திரு கா.ஆ. நாகராசன். சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த முன்னோடித் தலைமுறை அட்டை மூலம் தமது மருத்துவ செலவுகள் கவனித்துக் கொள்ளப் படுகின்றன என்று கூறிய திரு நாகராசன் சிங்கப்பூர் முதியோர் மீது செலுத்தும் அக்கறை உலகில் வெகு சில நாடுகளே காட்டுக் கின்றன என்பதைத் திண்ணமாக நம்புகிறார்.

குறிப்பாக அண்மையில் அரசு அறிவித்த முதியோர் ஆதரவுத் திட்டம்வழி தொடக்கத்திலிருந்து ஏழ்மையில் இருந்த, சேமிப்பு அதிகம் இல்லாத, ஆதரவும் இல்லாத முதியோருக்கு அரசே ஓர் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது என்றார் அவர். "இக்காலத்தின் அதிகமான வாழ்க்கைச் செலவினம் நமது பிள்ளைகளை வெகுவாகப் பாதிக்கிறது. நம்மால் முடிந்தவரை உழைத்தால் அவர்களது பாரம் சற்று குறையும். ஆனால் அப்படி வேலை செய்ய இயலாதவர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பி இருக் கிறார்கள. பிள்ளைகள் மனமுவந்து பெற்றோரைப் பேணி வந்தாலும் அவர்களில் பலரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

"இப்போது அரசின் அண்மைய திட்டங்கள் வழி அவ்வப்போது பண உதவி முதியோருக்குக் கிடைக்கிறது. அதன்வழி அவர்களது அன்றாடத் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பிள்ளைகளின் பாரத்தைக் குறைக்கவும் முடிகிறது," என்றார் அவர்.

'கோப்பி டாக்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு நாகராசன். படம்: திமத்தி டேவிட்