முஸ்லிம் சமயத் தலைவர்களும் முஸ்லிம்களும் நாட்டின் அமைதி யைக் கீழறுக்கும் தீவிரவாத கருத்துகளுக்கு எதிராக உறுதி யாக நிற்க வேண்டும் என்று முஸ் லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் நேற்று வலி யுறுத்திக் கூறினார். ஹவ்காங்கில் இருக்கும் என்-நயீம் பள்ளிவாசலில் அமைச் சர் காலை நேர தொழுகையில் கலந்துகொண்டார். பிறகு அவர் குர்பான் சடங்கிலும் பங்கெடுத்துக் கொண்டார். தொடர்பு, தகவல் அமைச்சரு மான டாக்டர் யாக்கூப் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அந்தப் பள்ளிவாசலில் மொத்தம் 180 ஆடுகள் குர்பான் கொடுக்கப்பட்டன. மூன்று கிலோ இறைச்சியும் மளிகைப்பொருள் அடங்கிய ஒரு பையும் அந்த வட் டாரத்தில் உள்ள ஏழைக் குடும்பங் களுக்கு விநியோகிக்கப்பட்டன.
"சிங்கப்பூரில் வசிக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஓர் அங்கம். நம்முடைய ஒற்றுமையைக் கீழறுக்கும் எந்த முயற்சிக்கும் இங்கு இடம் கிடையாது," என்று அமைச்சர் குறிப்பிட்டார். சமய, சமூகத் தலைவர்கள் ஒருபுறம் இருக்க, பயங்கரவாத, தீவிரவாத எண்ணம் அல்லது தகவல் பற்றி தெரிந்த பொதுமக் களும் அது பற்றி அதிகாரிகளுக் குத் தெரிவித்து அதன் மூலம் தங் கள் பங்கை ஆற்ற வேண்டும் என் றும் டாக்டர் யாக்கூப் குறிப்பிட்டார். நாம் ஒரு சமூகமாக ஒரு நாடாக பலப்பட வேண்டும் என்றார் அமைச்சர். ஹரி ராயா ஹஜ்ஜு போன்ற பண்டிகைகள் இஸ்லாத் தைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள உதவும் ஒரு தளமாக திகழ்கின்றன என்று கூறிய டாக்டர் யாக்கூப், குறிப்பாக சிங் கப்பூரில் பின்பற்றப்படும் இஸ்லாம் பரந்த சமூகத்துடன் கலந்துற வாடும் ஒரு சமயம் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள இந்தப் பண்டிகைகள் உதவுகின்றன என் றார்.

