அதிகமான தாதியர், துணைச் சுகாதார நிபுணர்கள் வட்டார சுகாதார முறை மனிதவளப் பங்காளித்துவத்தின் கீழ் மருத்துவமனைகளில் இருந்து தாதிமை இல்லங்களுக்கு மாற்றி பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவ்வாண்டு நவம்பர் மாத இறுதிவாக்கில் நடப்புக்கு வர இருக்கும் இந்தத் திட்டம் சென்ற செவ்வாய்க்கிழமை தொடங்கப் பட்டது. தேசியப் பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு (என்யூஎச்எஸ்), மெத்தடிஸ்ட் வெல்ஃபேர் சர்வீசஸ் (எம்டபள்யூஎஸ்) ஆகியவை இணைந்து செயல்படுத்தும் இந் தத் திட்டம் பராமரிப்புச் செயல்முறைகள், மாதிரிகள் ஆகியவற் றைச் செம்மைப்படுத்தி சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மனிதவள நெருக்கடியைக் குறைக்கும் நோக் கில் செயல்படுத்தப்படுகிறது.
அடுத்த 20 ஆண்டுகளில் 65 வயதைத் தாண்டும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை இருமடங் காகவிருப்பதால் நிலையங்களில் பராமரிப்பதற்கான தேவை அதிகரிக்கும்போது அதனைச் சமாளிக்க இது உதவும். எம்டபள்யூஎஸ்ஸால் நடத்தப்படும் 'பெத்தனி மெத்தடிஸ்ட் நர்சிங் ஹோம்' இந்தத் திட்டத் தின்கீழ் பயனடையும் முதல் இல்லமாகும். சுவா சூ காங்கில் அமைந்திருக்கும் இந்த இல்லம் நவம்பர் மாத இறுதியில் ஐந்து தாதியர், இயன்மருத்துவ நிபுணர்களைப் பெறும். சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இருக்கும் மற்ற தாதிமை இல்லங்களுக்கு இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இயூ டீயில் திறக்கப்படவுள்ள எம்டபள்யூஎஸ்ஸின் இரண்டாவது தாதிமை இல்லத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் என்யூஎச்எஸ் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் நீண்டகால பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளின் தேவைகள் குறித்து மேம்பட்ட புரிதலைப் பெறுவர். 'டிமென்ஷியா' எனப்படும் நினைவாற்றல் இழப்புக்கான பராமரிப்பு, முன்கூட்டியே பரா மரிப்புக்குத் திட்டமிடுதல், நோய்த்தொற்று கட்டுப்பாடு போன்றவற்றைக் கையாள தாதிமை இல்லங்களின் அடிப்படைத் திறன்களை சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் வலுப்படுத்துவர் என என்யூஎச்எஸ்ஸின் தலைமை நிர்வாகி ஜான் யூ லி வோங் கூறினார்.

