மூன்றரை கிலோ கஞ்சா, 6.3 கிலோ ஹெராயின் 280 கிராம் 'ஐஸ்' ஆகிய போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்சிலிங் டிரைவில் உள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடத்திய சோதனையில் போதைப்பொருள் கடத்தும் நபர் எனச் சந்தேகிக்கப்படும் 54 வயது ஆடவரும் அவரது இரண்டு கூட்டாளி களும் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரும் சிங்கப்பூரர்கள். கூட்டாளிகளில் ஒருவர் 43 வயது பெண். மற்ற ஆடவருக்கு வயது 49. மேலும், மலேசிய ஆடவர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் அவரை பாசிர் ரிஸ்ஸில் கைது செய்தனர். காம்பஸ்வேல் லேன் பகுதி யில் 57 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைதானவர்களிடமிருந்து சிக்கிய போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு $600,000. விசாரணை தொடர்கிறது.
$600,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கின
1 mins read
-

