சிங்கப்பூரில் மேலும் எட்டு பேருக்கு ஸிக்கா பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தத் தகவல் வெளியானது. சென்ற மாதம் 27ஆம் தேதி சிங்கப்பூருக்குள்ளேயே பரவிய 'ஸிக்கா' கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிருமித் தொற்று முதன்முதலாக அல்ஜுனிட் கிரசெண்ட் பகுதியில் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மூன்று மணி வரை மொத்தம் 341 பேர் 'ஸிக்கா'வால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப் பட்டது. சிங்கப்பூரில் 'ஸிக்கா' அபாயம் இருக்கக்கூடிய ஏழு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அது பற்றிய தகவலை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் http://www.nea.gov.sg/zika-clusters என்ற இணையப் பக்கத்தில் காணலாம். 'ஸிக்கா' தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தினசரி தகவல்கள் அந்த இணையத்தளத்தில் வெளியிடப் படுகின்றன.
பீஷான் ஸ்ட்ரீட் 12ல் கொசு மருந்தடிக்கும் தேசிய சுற்றுப்புற வாரிய ஊழியர். படம்: எஸ்டி

