போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் சென்றதுடன் அனுமதிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு வேகத்தில் அபாயகரமாக ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சென்ற ஜூலை மாதம் 6ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் 23 வயது ஆடவர் ஒருவர் யீஷூன் அவென்யூ 1ல் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றார். அதுகுறித்து அதிகாரிகள் கேள்வியெழுப்பவே, அவர் பாதையை மாற்றி மணிக்கு 167கிமீ. வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று பின் கைதானார்.
விதிமீறல் குற்றச்சாட்டு
1 mins read

