பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்திருப்பதன் எதிரொலியாக இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது; வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. பருவங்களில் காணப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்யப் பட்ட பிறகு, கடந்த ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 2.1 விழுக்காடாக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் அது 1.9 விழுக் காடாக இருந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்பூரர்களிடையே மார்ச் மாதத்தில் 2.6 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 3.1 விழுக் காடாக உயர்ந்தது. அதே காலகட் டத்தில் நிரந்தரவாசிகளிடையே இந்த விகிதம் 2.7லிருந்து 3 விழுக்காடாக உயர்ந்தது. பலர் குறைந்தபட்சம் 25 வாரங்கள் வரை வேலை இல்லாமல் இருந்தனர். நீண்டகால வேலையின்மை விகிதம் சிங்கப்பூரர், நிரந்தரவாசிகளிடையே 0.8 விழுக்காடாக இருந்தது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான நீண்டகால வேலையின்மை விகித மாகும். சென்ற ஆண்டிலிருந்து குறைந்துவரும் வேலைவாய்ப்பு, உச்ச பருவங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட பிறகு ஜூன் மாதத்தில் 49,400ஐத் தொட்டது. இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளில் வேலை தேடுபவர்களை விட வேலைவாய்ப்பு குறைவாக இருப்பது இதுவே முதல்முறை. இவ்வாண்டின் முதல் பாதியில் 9,510 பேர் வேலை இழந்தனர். 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிக அளவாகும் இது. முதல் காலாண்டில் வேலை இழந்தோரில் 45 விழுக்காட்டினர் ஜூன் மாதத்துக்குள் மீண்டும் பணியில் அமர்ந்தனர். இரண்டாம் காலாண்டில் மொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சி மெதுவடைந்து 4,200ஐத் தொட் டது.
வேலையின்மை கூடி, வாய்ப்புகள் குறைந்தன
1 mins read
-

