சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு தளங்களில் இடம்பெற்றுள்ள நீரிழிவு நோய் தொடர்பான தகவல் களைத் திரட்டி தேசிய நீரிழிவுத் தகவல் தொகுப்பை சுகாதார அமைச்சு உருவாக்கவிருக்கிறது. இதன் மூலம் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டங் களை வலுப்படுத்த முடியும் என்று அமைச்சு நம்புகிறது. சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று இந்த விவரங் களை வெளியிட்டார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடை பெற்ற சிங்கப்பூர் சுகாதார, உயிர் மருத்துவ மாநாட்டில் அவர் பேசினார்.
"சுகாதாரப் பராமரிப்பு நிலையங் களில் உள்ள தற்போதைய தரவுத் தளம் உட்பட பல இடங்களில் உள்ள தகவல்கள் இதற்காக ஒன்று திரட்டப்படும்," என்று அமைச்சர் சீ குறிப்பிட்டார். "நீரிழிவு தொடர்பில் பல தகவல்கள் உள்ளன. ஆனால் அவை சுகாதார அமைச்சு, சுகா தாரப் பராமரிப்பு நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளன. "இந்தத் தகவல்கள் இணைக் கப்படாமல் இருப்பதுடன் ஒன்று மற்றதுடன் சற்று வேறுபட்டு இருக் கின்றன. "இதனால் பல தளங்களில் உள்ள தகவல்களை ஒப்பிடுவது சிரமமான காரியமாக இருக்கிறது," என்று அமைச்சர் சொன்னார். புதிய தேசிய நீரிழிவு தகவல் தொகுப்பு, சிகிச்சை அளிப்பவர் களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கான தேசிய தகவல் தொகுப்பு "அதிக ஆபத்துகளை எதிர் நோக்கும் நோயாளிகளை அடை யாளம் கண்டு மருத்துவ ஆலோ சனை வழங்கவும் தகுந்த நேரத் தில் தகுந்த சிகிச்சை அளிக்கவும் புதிய தகவல் தொகுப்பு உதவும்," என்றார் அவர். சுகாதார அமைச்சும் இந்தத் தகவல் தொகுப்பு மூலம் நிலை மையைக் கண்காணித்து நீரிழிவு தொடர்பான கொள்கை, திட்டங் களை மதிப்பிட முடியும் என்று அமைச்சர் சீ தெரிவித்தார். சிங்கப்பூரில் தற்போது 400,000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், நீரிழிவு நோய்க்கு எதிராகப் போரை அறிவித்திருந்தார். மாநாட்டில் மேலும் பேசிய அமைச்சர் சீ ஹொங் டாட், "தேசிய சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் இணைந்து இரு புதிய ஆய்வு நிலையங்களை அமைக் கும்," என்றார்.

