சுகாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் உலகளவில் தலை சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது. சுவீடன், ஐஸ்லாந்து ஆகியன அந்தப் பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்த இதர நாடுகள். லான்செட் மருத்துவ சஞ்சிகை யின் இவ்வாரப் பதிப்பில் இது வெளியாகி உள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றம் வகுத் துள்ள சுகாதார இலக்குகளைப் பெற்றிருக்கும் நாடுகளின் பட்டி யல் அது. மொத்தம் 188 நாடு களைக் கொண்ட இப்பட்டியலில் மேற்சொன்ன மூன்று நாடுகளே முதல் இடத்தில் உள்ளன. சுகாதாரம் தொடர்பான ஐநா வின் குறிக்கோள்களைச் சுட்டிக் காட்டும் 33 பல்வேறுபட்ட வழி காட்டிக் குறிப்புகளைக் கொண்டு 124 நாடுகளைச் சேர்ந்த 1,870 ஆய்வாளர்கள் இந்தப் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
வறுமை, சுத்தமான தண்ணீர், கல்வி ஆகிய வெளிப்படையான அம்சங்களையும் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வு, தொழிற்கூட புத் தாக்கம் போன்ற அவ்வளவாக வெளிப்படாத அம்சங்களையும் அளவிடும் முறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. சுகாதாரத்தை அளவிட நீடித்த வளர்ச்சி இலக்கு என்பதனையே ஐநா வகுத்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூர் நீடித்த வளர்ச்சி இலக்குக் குறி யீட்டில் 85.3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சுவீடனும் இதே புள்ளிகளைப் பெற்றிருக்கும் அதேவேளை ஐஸ்லாந்துக்கு 85.5 புள்ளிகள் சென்றன. ஆக, இந்த மூன்று நாடுகளும் தலைசிறந்த சுகாதாரப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. நீடித்த வளர்ச்சி இலக்குக் குறியீட்டின் உலக அளவிலான சராசரி அளவு 59.3 என்பதாகும்.
இயற்கைப் பேரிடர் மரணம், சிறுவரிடையே நோய்த் தாக்கம், மலேரியா, தண்ணீர், துப்புரவு போன்றவை தொடர்பான பாது காப்பு அடையாளக் குறியீட்டில் சிங்கப்பூர் 100 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. எதிர்பாராதவிதமாக நச்சுப் பொருளால் நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதிலும் உலகளவில் பாது காப்பான ஒரே நாடு என்ற நிலை யை சிங்கப்பூர் பெற்றுள்ளது. உலகளவில் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முயற்சிகளில் குறை பாடுகள் உள்ளதையும் ஆய்வு அறிக்கை சுட்டியது. குறிப்பாக உடல்பருமன், ஹெச்ஐவி, தற் கொலை, மதுப்பழக்கம், மோச மான காற்றுத்தரம் போன்றவற்றில் இருந்து விடுபட உலக நாடுகள் பலவும் கடுமையாகப் போராடி வருவதாகவும் அறிக்கை தெரி வித்துள்ளது.

