வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் சிரம்பான் அருகே நேற்றுக் காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிங்கப்பூரர் ஒருவர் மாண்டார். மோட்டார்சைக்கிளில் சிரம்பானிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த 26 வயது வோங் சீ வை தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். அவரின் மோட்டார்சைக்கிள் சறுக்கி அருகிலுள்ள தடத்தில் விழுந்து சாலைத் தடுப்பில் மோதிய பின்னர் தீ பற்றிக் கொண்டது. சம்பவ இடத்திலேயே வோங் சீ வை மாண்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் சிரம்பான் துங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மலேசிய விரைவுச்சாலையில் சிங்கப்பூரர் மரணம்
1 mins read