டாக்சி மோதி முதியவர் காயம்

டாக்சி மோதி முதியவர் காயம்

1 mins read

மெரினா பே சாண்ட்சின் பேஃபிரண்ட் அவென்யூவில் நடந்து கொண்டிருந்த 70 வயது முதியவரை வேகமாக வந்த டாக்சி மோதியது. வாகனம் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்த அந்த முதியவர் டாக்சி வேகமாக வருவதைக் கண்டு பின்னோக்கி நடந்தார். ஆனால், வேகமாக வந்த டாக்சி அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த முதியவர் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். நேற்று பிற்பகலில் நடந்த அந்த சம்பவத்தில் முதியவரும் 52 வயது டாக்சி ஓட்டியும் காயம் அடைந்தனர். சுயநினைவோடு இருந்த இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்தது.