தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீஷானில் 61 வயது ஆடவர் கொலை, மகன் கைது

1 mins read

பீஷான் ஸ்ட்ரீட் 11, புளோக் 152B=யில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு 61 வயதுடைய தமது தந்தையைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் அவருடைய 25 வயது மகன் கைது செய்யப் பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படும் என்று போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட புளோக்கின் ஐந்தாம் மாடி வீடு ஒன்றில் நடந்த இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 8.20 மணிக்கு போலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர் களில் குறைந்தது ஒருவர் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து சத்தம் கேட்டதாக போலிசில் புகார் கொடுத்திருந்ததாகவும் அவ்வீட்டில் பொருட்கள் அங்கும் இங்கும் வீசப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. போலிசார் வீட்டிற்கு வந்த போது ஓர் ஆடவரின் உடல் அசைவற்று இருந்ததைக் கண்டனர். சம்பவ இடத்தில் அந்த ஆடவர் மரணம் அடைந்துவிட்டதாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள் அறிவித் தனர். மாண்ட ஆடவர் மீது எந்தக் காயங்களும் தென் படவில்லை. சனிக்கிழமை பின்னிரவு 12.30 மணியளவில் ஆதாரங்களுடன் சில போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை விட்டுச் சென்றுள்ளனர். கொலைக் குற்றம் நிரூபிக்கப் பட்டால் கைது செய்யப்பட்ட ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.