சிங்கப்பூரின் இரண்டாவது வர்த்தக வட்டாரமாக உருவெடுக்க உள்ள ஜூரோங் லேக் வட்டாரத்தின் பெருந்திட்டத்திற்கான கருத்துப்படிவத்தை உருவாக்குவதற்கான தேர்வுச் சுற்றில் ஐந்து குழுக்கள் தேர்வு பெற்றுள்ளன என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 'எதிர்காலத்தின் வட்டார'மாக வும் சிங்கப்பூரின் இரண்டாவது வர்த்தக வட்டாரமாகவும் உருவாக்கும் இலக்கை அடைவதற்கான மற்றுமொரு முக்கிய படிக்கல் இது என்று ஆணையம் கூறியது. மொத்தம் 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள் வலு வான ஆர்வத்தைத் தெரிவித் துள்ளன.
ஜூரோங் லேக் வட்டாரப் பெரும் திட்டத்திற்கு குழுக்கள் தேர்வு
1 mins read

