இளம் வலைப்பதிவாளர் ஏமஸ் யீ, மதரீதியான உணர்வுகளைக் காயப்படுத்தியதாக தம் மீது சுமத்தப்பட்ட எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகளையும் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். முஸ்லிம் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கில் ஒரு புகைப்படத்தையும் இரண்டு காணொளிகளையும் ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் மே 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வலைத் தளத்தில் பதிவு செய்த குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் 17 வயது ஏமஸ் யீ ஒப்புக்கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த விசாரணை, ஏமஸ் யீ குற்றங்களை ஒப்புக்கொள்ள முனைந்ததையடுத்து ஒரு முடிவுக்கு வரவுள்ளது. ஏமஸ் யீ, தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 8 குற்றச்சாட்டு களையும் முன்னதாக மறுத்திருந் தார். அவற்றில் காவல் நிலையத்தில் முன்னிலையாகாதது, மத உணர்வுகளைக் காயப்படுத்தியது ஆகிய குற்றங்களும் உள்ள டங்கும். இதுவரை குற்றங்களை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வந்த ஏமஸ் யீ, விசாரணையின் மூன்றாவது நாளன்று திடீரென பல்டி அடித்துள்ளார். தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். 2015 டிசம்பர் 14, 2016 மே 10 ஆகிய தேதிகளில் ஜூரோங் காவல் நிலையத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இக்குற்றங்களுக்கு தலா ஒரு மாதச் சிறைத் தண்டனையும் $1,500 அபராதமும் விதிக்கப்படலாம். நான்காவது நாள் விசாரணையின்போது மற்ற மூன்று குற்றச் சாட்டுகளையும் ஒப்புக்கொண் டார். ஆகஸ்ட் 24ஆம் தேதி, ஒரு ஃபேஸ்புக் பதிவு, ஒரு வலைப் பதிவு ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்திய குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். அதேபோல் கிறிஸ்துவர்களின் மத உணர்வைக் காயப்படுத்தும் வகையில் காணொளி வெளியிட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக் கொண்டார். இந்தக் குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்குமாறு அரசாங்க வழக்கறிஞர் மாவட்ட நீதிபதி ஓங் ஹிங் சுன் முன்னிலையில் இன்று வாதிடுவார்.
வலைப்பதிவாளர் ஏமஸ் யீ எஞ்சிய மூன்று குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்
2 mins read
-

