ஸிக்கா பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் ஒன்றான பிஷான் ஸ்ட்ரீட்=12ஐ ஸிக்கா பாதிப்பு இல்லாத வட்டாரமாக தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங் களாக இப்பகுதியில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வட்டாரத்தை இன்னும் மூன்று வாரங் களுக்கு உன்னிப்பாக கவனிக்கப்போவதாக வாரியம் தெரி வித்துள்ளது. சிங்கப்பூரில் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஸிக்கா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து ஸிக்கா இல்லாத பகுதியாக ஒரு பகுதி அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஸிக்கா பாதிக்கப்பட்ட ஐந்து பேர் இப் பகுதியுடன் தொடர்புடையவர்கள் என்று இந்த மாதம் 6ஆம் தேதி கூறப்பட்டது.
பிஷான் ஸ்ட்ரீட் 12ல் ஸிக்கா இல்லை
1 mins read

