இணையம் வழி பந்தயம் கட்டலாம்

இணையம் வழி பந்தயம் கட்டலாம்

1 mins read
c88a98a0-e67f-49fc-a651-35aba2ad142a
-

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் பூல்ஸ், சிங்கப்பூர் டர்ஃப் கிளப் ஆகிய இரண்டு நிறு வனங்களுக்கு இணையம் மூலம் சூதாட்டப் பந்தயம் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாத காலத்தில் இணையத்தில் சூதாட்டப் பந்தயம் கட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். தொலைதூர சூதாட்டச் சட்டத்திலிருந்து இந்த இரு அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சு விலக்கு அளித்திருக் கிறது. இந்தச் சட்டம் இணையம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் சூதாடுவதைத் தடுக்கிறது. அனுமதி அளிக்கப்பட்டிருந் தாலும் சிங்கப்பூரின் இந்த இரு அமைப்புகளும் பல பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் அக்டோபர் 25ஆம் தேதியும் டர்ஃப் கிளப் நிறுவனம் நவம்பர் 15ஆம் தேதியும் இந்தச் சேவையைத் தொடங்கும்.