லீ குவான் இயூ வாரிசுகள் மனு தள்ளுபடி

லீ குவான் இயூ வாரிசுகள் மனு தள்ளுபடி

1 mins read

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் வாரிசு களான டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் ஆகிய திரு லீயின் இளைய பிள்ளைகள் இருவர் அரசாங்கத்திற்கு எதிராக செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த 1980 காலகட்டத்தில் பதிவான திரு லீ குவான் இயூவின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளின் நகல்களைப் பயன்படுத்தவும் அவற்றைப் பெறவும் தங்களுக்கு உரிமை இருப்பதாக அந்த வாரிசுகள் கோரியிருந்தனர். அவற்றைப் பெறவும் நகல் எடுக்கவும் பயன்படுத்தவும் அனுமதி கொடுக்க லீ குவான் இயூவிற்கு உரிமை உண்டு என்ற அரசாங்கத்தின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தனது வாரிசுகள் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்த அல்லது அவற்றைத் தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள அனுமதிப்பது லீ குவான் இயூவின் விருப்பம் அல்ல என்ற அரசாங்கத்தின் வாதத்தையும் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.