'மசேநிதி ஓய்வு காலத்திற்கே'

'மசேநிதி ஓய்வு காலத்திற்கே'

2 mins read
fdb7178f-fc71-4efc-8c30-d2a9381c355b
-

மத்திய சேமநிதி (மசேநிதி) பணம் ஓய்­வு­கா­லத்­திற்­கும் வீடு, சுகா­தா­ரத் தேவை­களுக்­கும் பயன்படுத் தப்பட வேண்டிய ஒன்று. அவசரசத் ­தேவை­களுக்­கும் ஆடம்ப­ரச் செல­வு­களுக்­குமல்ல என்று மனிதவள அமைச்­சர் லிம் சுவீ சே நேற்று கூறியிருக்கிறார். அதனால்­தான் மக்கள் தங்கள் விருப்­ப­த்திற்­கும் தேவைக்­கும் ஏற்ப பணத்தை எடுக்க இந்த திட்டம் அனு­ம­திக்­காது என்றார் அமைச்சர். அவர் மக்கள் கழக ஏற்­பாட்­டில் நடை­பெற்ற கலந்­துரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் பேசினார். மத்திய சேமநிதி செயல்­முறை பற்றி பல தவறான கருத்­து­க்கள் நில­வு­வ­தால் அதைப்­பற்றி தெளிவு படுத்த வேண்டும் என்றார் அமைச்­சர். "நமது உறுப்­பி­னர்­களின் தேவைகள் காலத்­திற்கேற்ப தொடர்ந்­து ­மாறி வரு­வ­தால் 'பொக்­கி­மோன்' போல மசேநிதி மாற்றம் பெற்று வரு­கிறது," என்றார் அமைச்­சர்.

கடந்த இரண்டு மாதங்களில் மசேநிதி செயல்­முறை­யில் மாற்றங்கள் பற்றிய தகவல் வெளி­யா ­னது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இடையே மசேநிதி திட்டங்கள் பற்றி புரிந்­து­கொள்வது கடி­ன­மாக இருக்­கிறது என்ற கருத்து நில­வி­யது. எந்த ஆண்டுத்தொகை திட்டத்தை தெரிவு செய்வது என்ற குழப்பம் பலரிடம் ஏற்பட்டது. மக்களிடம் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய சேமநிதிக் கழகம் பல தொடர் நிகழ்ச்­சி­களுக்கு ஏற்பாடு செய்து ­ அமுல்படுத்தவிருக்கிறது என்று நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மசேநிதி அவ­ச­ரத் தேவை­களுக்­காக உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல என்பதால் மசேநிதி பணத்தை அவரசத்திற்கு எடுத்துக் கொண்டு பின்னர் திருப்பிக் கொடுக்கும் மாற்றுத் திட்டத்தை அனுமதிக் கப்போவதில்லை என்றார் அமைச் சர்.

மசேநிதி எதற்காக? என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 300 அடித்தளத் தலைவர்களிடம் உரையாடும் அமைச்சர் லிம் சுவீ சே. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்