மானபங்கக் குற்றத்திற்காக ஆடவருக்கு 11 ஆண்டுகள் சிறை

மானபங்கக் குற்றத்திற்காக ஆடவருக்கு 11 ஆண்டுகள் சிறை

1 mins read
ff83d830-3b99-4956-8bd9-b0a92ce43a47
-

சிலோசோ கடற்கரையில் குடிபோதை யில் இருந்த 20 வயது மாதுவை மானபங்கப்படுத்திய 27 வயது ஆடவருக்கு நேற்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. பிரேம் நாயர் (படம்) என்ற அந்த ஆடவர் செந்தோசா கடற் கரையில் சுற்றுக்காவல் அதிகாரியாக இருந்தபோது இந்தக் குற்றத்தைப் புரிந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம்தேதி அந்த மாது தனது தோழி யுடன் கடற்கரையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மது அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் பிரேம் அவர்களிடம் பேச்சுக் கொடுத்து 'மது விளையாட்டு' விளையாட அழைத்தார். மதுவைத் தொடர்ந்து அருந்திய வுடன் அந்த மாது மயக்கநிலை அடைந்தார். பின்னர் வீடு திரும்ப எண்ணம் கொண்டு அவரது தோழி கைப்பை எடுக்கச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் பிரேமையும் அந்த மாதுவையும் காணவில்லை. அதன் பின்னர் கடற்கரையில் இன்னொரு பகுதியில் பிரேம் தன்னுடன் அழைத்து சென்ற மாதுவை மானபங்கம் செய்தார். அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்த இருவர் போலிசுக்குத் தகவல் அளித்தனர். பிரேம் பின்னர் கைதானார்.