சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பில் அடிக்கடி பிரச்சினையை கொடுக் கும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலை முற்றிலுமாக கைவிட்டுவிடு வது உள்ளிட்ட பல யோசனைகள் குறித்து ரயில் சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஆராய்ந்து வருகின்றன. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ரயில் வண்டிகள் நிர்வாக இயக்கு நர் லீ லிங் வீ, இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் இதன் தொடர்பில் பல விவரங்களை வெளியிட்டிருக்கிறார். புக்கிட் பாஞ்சாங் இலகு ரயி லின் எதிர்காலத்தை ஒரு கூட்டுக் குழு மறுபரிசீலனை செய்துவரு கிறது. 17 வயதாகும் அந்த ரயில் முறையின் வடிவமைப்பு கிட்டத் தட்ட முடிவு கட்டத்திற்கு வந்து விட்டது. மூன்று விருப்ப உரிமைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வரு கின்றன. இப்போதைய தண்டவாள வழியில் சுயசக்தி தானியக்க வாகனங்களை இயக்க விடுவது ஒரு வழி. மின் வழங்கீடு, சமிக்ஞை முறை, தண்டவாளங்கள், நிலையங் கள் போன்ற முக்கியமான அடிப் படை அம்சங்களின் வடிவமைப்பை குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம் படுத்தி புதிய இலகு ரயில் முறையை அமைப்பது.
இப்போது நடப்பில் இருக்கும் முறையைவிட மிகவும் நவீனமான சமிக்ஞை முறையை அமல்படுத்தி, ரயில் வண்டிகள் அடிக்கடி பிரச் சினை இல்லாமல் ஓடுவதுபோல் ஆக்கலாம் என்பது மூன்றாவது யோசனை என்று திரு லீ குறிப்பிட்டிருக்கிறார். புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் முறையை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது என்ற யோசனையும் இருக்கிறது. இந்த யோசனை அமல்படுத்தப்பட்டால் புக்கிட் பாஞ் சாங் வட்டார மக்கள் பேருந்து சேவையை நாடவேண்டியிருக்கும். இரட்டைப் பேருந்துகள் 130 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவை. அதேநேரத்தில் இலகு ரயில் வண்டி 105 பேரைத் தான் ஏற்றிச்செல்லும். இலகு ரயில் சேவை கைவிடப் பட்டு மக்கள் பேருந்துச் சேவைக் குத் திரும்பினால் சாலைகளில் தேக்கம் அதிகரிக்கக்கூடும் என் றார் அவர். இலகு ரயில் சேவைக்கு நீண்டகால தீர்வு பற்றி கூட்டுக் குழு முடிவு செய்யும் வேளையில், அந்த ரயில் சேவையின் நம்பகத் தன்மையை மேம்படுத்த குறுகிய கால நடவடிக்கைகளை எஸ்எம் ஆர்டி அமல்படுத்தி வருகிறது. புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் வழித்தடம் 1999ல் செயல்படத் தொடங்கியது. அது முதலே அது பல பிரச்சி னைகளை எதிர் நோக்கி வரு கிறது. அண்மையில் சேவையில் பிரச்சினை ஏற்பட்டதால் ஆயிரக் கணக்கான பயணிகளுக்கு வசதி குறைவு ஏற்பட்டது.
செகார் (Segar) நிலையத்தில் இலகுரக ரயிலுக்காக காத்திருந்த பயணிகள். சென்ற மாதம் 28ஆம் தேதி இந்தச் சேவை தாமதமடைந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

