மண்டாய் புத்துயிரளிப்புத் திட்டம்

மண்டாய் புத்துயிரளிப்புத் திட்டம்

1 mins read
c9ea0ad0-07c8-4ca5-b1a7-9c8c99448fca
-

மண்டாய் வட்டார மறுஉருவாக்கத் திட்டத்தின் பாதிப்புகளைக் குறைக்க, மண்டாய் பார்க் ஹோல் டிங்ஸின் (எம்பிஹெச்) திருத்தப் பட்ட சுற்றுப்புறப் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூடுதல் நடவடிக் கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மண்டாய் வட்டாரப் புத்துயிரளிப்புத் திட்டத்திற்காகச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் தொடர் முயற்சிக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டதாக எம்பிஹெச் நேற்று வெளியிட்ட செய்தியாளர் அறிக்கை தெரிவித்தது.

மண்டாய் வட்டாரத்தை ஒருங் கிணைந்த இயற்கை, வனவாழ்வின மையமாக உருவாக்கும் திட்டத் திற்கான சுற்றுப்புறப் பாதிப்பு மதிப்பீடு குறித்து நடத்தப்பட்ட பொது கலந்தாலோசனையைத் தொடர்ந்து மதிப்பீட்டு அறிக்கை திருத்தப்பட்டது. "திருத்தப்பட்ட சுற்றுப்புறப் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண் டுள்ளது. இவ்வட்டாரத்தின் நுட்ப மான மேம்பாட்டுக்கான விரிவான வடிவமைப்புத் திட்டத்தையும் வனவாழ்வினக் காப்புத் திட்டத் தையும் எம்பிஹெச் மேற் கொள்ளும்," எனச் செய்தியாளர் அறிக்கை தெரிவித்தது.

மண்டாய் இயற்கை வட்டாரத்தில் அமைக்கப்படவிருக்கும் மழைக்காட்டின் மாதிரிப்படம். படம்: மண்டாய் சஃபாரி பார்க் ஹோல்டிங்ஸ்