வேலை தேடுவோருக்கு உதவ புதிய இணைய வேலைச்சந்தை

வேலை தேடுவோருக்கு உதவ புதிய இணைய வேலைச்சந்தை

1 mins read

வில்சன் சைலஸ்

மெதுவடையும் வேலைச் சந்தையை முன்னிட்டு வேலை தேடுவோருக்குக் கைகொடுக்க தேசிய வேலைவங்கி இணைய வேலைச் சந்தையாக உருமாற்றம் பெறும் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறியிருக் கிறார். வேலையில்லா உள்ளூர்வாசி களின் விகிதம், பணிநீக்கம் செய் யப்படுவோர் எண்ணிக்கை ஆகியன பற்றி மனிதவள அமைச்சு சென்ற மாதம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய திரு லிம் இதனைத் தெரி வித்தார். "புது வேலைவாய்ப்புகளுக்காக அடுத்த வேலைக் கண்காட்சிக்குக் காத்திருக்காமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தில் வேலை தேட முடியும். ஒரே கூரை யின்கீழ் அனைத்து வேலைவாய்ப் புகள் பற்றிய விவரங்களும் இடம் பெறுவதால் வேலை தேடுவோருக்கு இது பேருதவியாக இருக்கும்," என்றார் அமைச்சர்.

பட்டதாரிகள், வேறு வேலைக்கு மாற விரும்புவோர், துடிப்புடன் திகழ விரும்பும் முதிய ஊழியர்கள் என இந்தப் புதிய இணைய வேலைச் சந்தை அனைவரையும் நோக்கிச் செயல்படுவதாக அமையும் என்றும் திரு லிம் கூறினார். புது இணைய வேலைச்சந்தை எப்போது தொடங்கும் என்று திரு லிம் குறிப்பிடவில்லை என்றாலும் இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பம், விமானத் துறை ஆகிய துறைகளிலிருந்து 51 நிறு வனங்கள் கடந்த மாதம் நடந்த இரண்டு வார இணைய வேலைச் சந்தையின் மூலம் 500 வேலை வாய்ப்புகளை முன்வைத்தன என அவர் சுட்டினார்.