கோனி தீவின் மாடு மரணம்

கோனி தீவின் மாடு மரணம்

1 mins read
f243dcfd-e10d-4892-923f-f902b4a80a16
-

கோனி தீவு பூங்காவில் தன்னந்தனியாக வசித்துவந்த மாடு இறந்துவிட்டது என்று நேற்று தேசிய பூங்காக் கழகம் தெரி வித்தது. சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடு இறந்து விட்டதால் வருத்தம் அடைவதாகவும் அது குறிப்பிட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் உடல் நலப்பரிசோதனையில் ரத்த மாதிரியைச் சேகரிப்பதற்காக அந்த மாடு மயக்கமடையச் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது உயிர் பிழைக்கவில்லை.

பொது மக்களின் நலன்களுக் காக மாடுகளுக்கு உடல் பரிசோதனை அவசியம் என்று குறிப் பிட்ட கழகம், உதாரணமாக விலங்குகளிடமிருந்து மனிதர் களுக்குப் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று கூறியது. அதன் பெரிய உருவத்தைப் பொருத்து அனைவரது பாதுகாப் பையும் உறுதி செய்வதற்காக மாட்டை மயக்கமடையச் செய்வது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் வாரியம் தெரிவித்தது. மயக்க நிலையில் இருந்தபோது அதற்கு இதய, நுரையீரல் பிரச் சினைகள் ஏற்பட்டு இறந்திருக் கலாம் என்று வேளாண், உணவு, கால்நடை வாரியம் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோனி தீவுக்கு இந்த மாடு எப்படி வந்தது என்பது புரியாத புதிராக இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக அங்கு அது தன்னந்தனியாக வசித்துவந்தது.