தமிழ் மொழி, இலக்கியப் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்கள்

தமிழ் மொழி, இலக்கியப் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்கள்

1 mins read
00e98e88-b2e2-43c8-85b3-96078f3b895f
-

ப. பாலசுப்பிரமணியம்

குடும்பப் பொறுப்புகளை நன்கு சமாளித்து தமிழ்மொழி, இலக்கியப் பட்டம் பெற்று அதில் சிறப்புத் தேர்ச்சிக்கான விருதுகளையும் மூவர் பெற்றுள்ளனர். சிங்கப்பூர் நிர்வாகக் கழகத் தலைமையகத்தில் நேற்று நடந்த 'யுனிசிம்' பட்டமளிப்பு விழாவில் இவர்கள் தங்களது வெற்றியை குடும்பத்தினருடன் கொண் டாடினர்.

இம்மூவரில் ஒருவரான 41 வயது திருமதி கீதா ராஜா, ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் சுவாரசியப் பாடத்திட்டமும் இந்த மூன்றாண்டு பட்டப்படிப்பை வெற்றி கரமாக முடிக்க உதவின என்றார். விவசாயத் துறையில் ஏற்கெ னவே ஒரு பட்டப்படிப்பை முடித் திருந்தாலும், மொழியின் மேல் இருந்த பேரார்வம் தம்மை தமிழ் சார்ந்த பட்டப்படிப்பை மேற் கொள்ளத் தூண்டியது என்று அவர் குறிப்பிட்டார்.

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பணியில் சேரவிருக்கும் இவர், அடுத்தகட்டமாக மாணவர் களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வகுப்புகளை நடத்தி எதிர்காலத்தில் தமிழில் முது கலைப் பட்டம் மேற்கொள்ளவும் எண்ணம் கொண்டுள்ளார். தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக அறிவியல் பாடம் கற் பித்தவர் விருது வென்ற மற்றொ ருவரான 39 வயது திருமதி கீதா ராஜ்குமார்.

தமிழ் மொழி, இலக்கியப் பட்டப்படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற (இடமிருந்து) திருமதி கீதா ராஜ்குமார், திருமதி அருள்மதி லெனின், திருமதி கீதா ராஜா. படம்: திமத்தி டேவிட்