நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதி ஒன்றில் ஒரு மாணவரை ரகசியமாக படம் எடுத்த சந்தேக நபர் ஒருவர் சிக்கினார். விடுதி எண் 16ல் தங்கியிருக்கும் நான்காவது ஆண்டு மாணவர் ஒருவரை சில மாணவர்களே பிடித்தனர். குளித்துக் கொண்டிருந்த ஒரு மாணவரை அவர் படம் எடுத்த தாகத் தெரியவந்தது. விடுதியில் பின்னிரவு சுமார் 1 மணிக்கு குளித்துக்கொண்டிருந்த மாணவர், தன் குளியல் அறைக்கு மேலே சுவரில் ஒரு செல்பேசியைக் கண்டார். வேகமாக ஓடி சந்தேகப்பேர்வழியை அவர் மடக்கினார். அந்தப் பேர் வழி ஒரு தடுப்பறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
குளித்துக் கொண்டிருந்தவர் உதவிக்கு அழைத்தார். சில மாணவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் எல்லாரும் சேர்ந்து சந்தேகப்பேர்வழியைப் பிடித்தார்கள். அவருடைய செல்பேசியைச் சோதனையிட்டபோது அதில் மாணவர்கள் குளிக்கும் 66 காணொளிகள் பதிவாகியிருந் தன. சந்தேகப்பேர்வழி அவற்றை அழித்துவிட்டார். ஆனால் செல் பேசியில் 'அண்மையில் அழிக்கப்பட்டவை' என்ற பெயருள்ள கோப் பில் அந்தப் படங்கள் இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே, அரசாங்கம் 16 மாணவர் தலைவரான பால் லீ என்பவர், பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு அதிகாரிகளை அழைத் தார். அவர்கள் இந்த விவகாரம் பற்றி போலிசிடம் தெரிவித்தனர்.

