போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 92 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 92 பேர் கைது

1 mins read

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவு முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கையில் 92 போதைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வேட்டை இம்மாதம் 3ஆம் தேதி முதல் நேற்று வரை 11 நாட்களுக்கு நீடித்தது. பிடிபட்டவர்களிடம் இருந்து 315 கிராம் ஹெராயின், 113 கிராம் கெட்டமைன், 41 கிராம் கஞ்சா, 232 கிராம் எக்டஸி மாத்திரைகள். 97 எரிமின்-=5 மாத்திரைகள் ஆகி யன பறிமுதல் செய்யப்பட்டன. அங் மோ கியோ, பாலஸ்டியர், பீஷான், புக்கிட் மேரா, ஹவ்காங், ஜூரோங், பாசிர் ரிஸ், பொங்கோல், செஞ்சா, தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ், யீ‌ஷூன் போன்ற பகுதிகளில் அதிகாரிகள் தங் களது கைது நடவடிக்கையை நடத்தினர்.

பிடிபட்ட குற்றவாளிகளுள் ஒரு வரான 28 வயது சிங்கப்பூர் ஆடவரிடம் இருந்து 90 கிராம் ஹெராயினும் சிறிய அளவிலான 'ஐஸ்' போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டன. எடை பார்க்கும் கருவி, ஏராள மான பிளாஸ்டிக் பைகள் ஆகியனவும் அவர் வசம் இருந்தன. இம்மாதம் 4ஆம் தேதி தெம்பனிஸ் சென்ட்ரலில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போதைப் புழக்க சந்தேக நபர் களான 26 வயதுப் பெண்ணும் 29 வயது ஆடவரும் கைது செய்யப் பட்டனர்.