பிரிட்டனின் 'ரெட் ஏரோஸ்' போர் விமான சாகசக் காட்சி

பிரிட்டனின் 'ரெட் ஏரோஸ்' போர் விமான சாகசக் காட்சி

1 mins read
6f14adf4-66af-406f-b18f-9f4fcc755fa4
-

பிரிட்டிஷ் அரச ஆகாயப் படையின் 'ரெட் ஏரோஸ்' நேற்று பிற் பகல் சிங்கப்பூர் வானில் பறந்து, பல சாகங்களைப் புரிந்து பார்வை யாளர்களைப் பரவசத்தில் ஆழ்த் தின. இருமுறை இந்த சாகசக் காட்சி ஒத்திவைக்கப்பட்டாலும், சிங்கப்பூரர்கள் பெருந்திரளாக வந்து மிகத் திறமையான பிரிட்டிஷ் அரச ஆகாயப் படை விமானிகளின் ஆற்றல்களைக் கண்டு வியந்தனர். பிரிட்டனின் மிகச் சிறந்த வற்றைப் பிரபலப்படுத்தும் நோக் கத்தில் இந்தக் குழு மேற்கொண்டிருக்கும் மத்திய கிழக்கு, ஆசிய வருகையின் ஒரு பகுதி யாக சிங்கப்பூர் வருகை இடம்பெற்றிருந்தது. 'ரெட் ஏரோஸ்' சாகச விமானக் காட்சி இதற்கு முன் 1986, 1996, 2003 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூரில் இடம்பெற்றது.

பிரிட்டிஷ் அரச ஆகாயப் படையின் 'ரெட் ஏரோஸ்' போர் விமானங்கள் மரினா பே பகுதி வானில் வட்ட மிட்டு பற்பல சாகசங்களைப் புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்