கட்டுமானத் தொழில்துறையின் உற்பத்தித் திறன் 2009ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண் டும் 1.3 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளது. இருப்பினும் அதில் மனிதவளம் ஒரு முக்கிய கட்டுப்பாடாகத் திகழ்கிறது என்பதால் அதில் இன்னும் மேம்பாடு காணப்படுவது முக்கியமாகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு வரை கட்டு மானத் துறையின் உற்பத்தியை ஒவ்வோர் ஆண்டும் மூன்று விழுக்காடு அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அது வெவ்வேறு வழிகளில் நடத்தப் படும் என்றும் திரு வோங் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் கட்டுமான உற்பத்தி வாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிபோது சொன்னார்.
அந்த வகையில் கட்டட, கட்டு மான ஆணையம் புதிய கட்டுமான உற்பத்தித் திறன் ஆய்வு மேம் பாட்டுத் திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் கட்டுமானத் தொழில்துறையில் உள்ள ஏழு ஆய்வு மேம்பாட்டுக் குழுமங்களில் நீண்ட காலத்துக்குச் செயல்படும் 35 தொழில்நுட்பங்கள் முடுக்கி விடப்படும். உற்பத்தி மற்றும் பொருத்துத லுக்கான வடிவமைப்பு; தானியங் கிச் சாதனம் மற்றும் மனித இயந் திரவியல்; தகவல் தொடர்பு தொழில்நுட்பம்; கட்டடத் தகவல் மாதிரி, மெய்நிகர் வடிவமைப்பு, கட்டுமானம்; முப்பரிமாண அச்சி டுதல்; மேம்பட்ட கட்டுமானப் பொருட்கள்; உற்பத்தி சிவில் பொறியியல் தீர்வுகள் போன்றவை அந்தத் தொழில்நுட்பங்களில் அடங்கும்.
சிங்கப்பூர் கட்டுமான உற்பத்தி வாரத்தைத் தொடங்கி வைத்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (நடுவில்) அங்கிருந்த காட்சிப் பொருட்களைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

