உரிய நேரத்தில் தேசிய சேவையாற்றாத சகோதரர்களுக்குச் சிறை, அபராதம்

உரிய நேரத்தில் தேசிய சேவையாற்றாத சகோதரர்களுக்குச் சிறை, அபராதம்

1 mins read
bc98f13f-f7a4-4c32-bb86-8a7eb080c004
-

தேசிய சேவை கடமையாற்ற திரும்பி வராத சகோதரர்கள் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள் ளது. சக்திகணேஷ் சிதம்பரம் என்ப வருக்கு மூன்று வாரச் சிறையும் அவரது தம்பி வந்தன குமார் சிதம் பரத்திற்கு $6,000 அபராதமும் நேற்று முன்தினம் விதிக்கப்பட்டது. ஐந்தாண்டுகள், ஆறுமாதம், 17 நாட்கள் தேசிய சேவைக்கு வரத் தவறியதற்காகத் தம் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டை சக்திகணேஷ், 25, ஒத்துக்கொண்டார்.

அதேபோல, மூன்றாண்டுகள், ஆறு மாதம், இரண்டு நாட்கள் தேசிய சேவைக்குத் திரும்பாத குற்றத்தை வந்தனகுமார் ஒத்துக்கொண்டார். இன்னும் இரண்டு வாரங்களில் அவர் 23 வயதைத் தொட உள்ளார். இது தவிர, முறையான வெளி யேறும் அனுமதி இன்றி சிங்கப்பூ ருக்கு வெளியே இருந்ததாகத் தங் கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை யும் அந்தச் சகோதரர்கள் ஒத்துக் கொண்டனர். தண்டனை விதிக்கப் படும்போது இந்தக் குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட் டது.

இந்த இருவருக்குமே குறைந்த கால சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பும் அவர்களுக்கு அபராதம் மட்டும் போதும் என்று தற்காப்புத் தரப்பும் ஏற்கெனவே வாதிட்டு இருந்தன. இப்போது விதிக்கப்பட்டு இருக்கும் தண்டனையைக் கடுமையாக்கக் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்ய எண்ணியுள்ளது.

வந்தன குமார் சிதம்பரம், 22, தமது தாயாருடன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்