தாய்லாந்து மன்னருக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

தாய்லாந்து மன்னருக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

1 mins read
8f9f545c-d8fd-4200-b6ed-7c213977e7ec
-

பிரதமர் லீ சியன் லூங் நேற்று பேங்காக்கில் இருக்கும் அரண்மனையில் தாய்லாந்து மன்னர் பூமிபோலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அவர் மலர் வளையம் வைத்து, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார் என்று வெளியுறவு அமைச்சு கூறியது. தாய்லாந்து மன்னர் பூமிபோல் தமது 88வது வயதில் அக்டோபர் 13ஆம் தேதி காலமானார்.

திரு லீ, தாய்லாந்தின் பிரதமரைச் சந்தித்து, மன்னர் காலமானதன் தொடர்பில் தமது அனுதாபத்தை நேரடியாக அவரிடம் தெரிவிக்கவிருந்தார். ஆனால் கடைசி நிமிட நேர அட்டவணையில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்துப் பிரதமரை திரு லீ சந்திக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் முன்னதாகக் குறிப்பிட்டு இருந்தது.

"தாய்லாந்து மன்னரை அந்த நாட்டு மக்கள் மிகவும் நேசித்துப் போற்றினார்கள். தாய்லாந்திற்காகவும் தன் மக்களின் நலனுக்காகவும் மன்னர் பூமிபோல் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டார்," என்று அவர் மறைவையொட்டி ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் திரு லீ குறிப்பிட்டு இருந்தார். திருமதி லீ, வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் பிரதமருடன் தாய்லாந்து சென்றிருந்தனர்.

தாய்லாந்தின் காலமான மன்னர் பூமிபோலுக்கு பிரதமர் லீ சியன் லூங் பேங்காக்கில் உள்ள அரண்மனையில் இறுதி மரியாதை செலுத்தினார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு